மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மற்ற பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், செப்டம்பர் 7 ஆம் திகதி வரை சூரியன் பார்வைக்கு தெற்கு நோக்கி நகரும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறுகிறது.
அதன்படி இன்று நண்பகல் 12.09 மணிக்கு தலஹேன, பின்தெனிய, அருக்வத்தை, கரகஹவெல மற்றும் கிவுலாகம ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம்பெறும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.