சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா டுவீட் செய்துள்ளார்.
தனது டுவிட்டர் செய்தியில், சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை எட்டியதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது இலங்கை முன்னோக்கி செல்வதற்கு முக்கியமான ஒரு படியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் ஆகஸ்ட் 31 அன்று உத்தியோகப் பூர்வமாக அறிவித்தது.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் 48 மாத வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் விரிவான நிதி வசதிகள் வழங்கப்படும்.
Very pleased that IMF staff and Sri Lankan government officials have reached a staff-level agreement to support the country’s economic policies with a 48-month Extended Fund Facility of about US$2.9 billion. This is an important step forward for Sri Lanka. https://t.co/bKikg3KDZa pic.twitter.com/Y9PBNI884I
— Kristalina Georgieva (@KGeorgieva) September 4, 2022