கம்பஹா, யாகொட புகையிரத கடவையில் கார் ஒன்று கண்டி – கொழும்பு நகரங்களுக்கு இடையிலான அதிவேக புகையிரதத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயில் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில் குறித்த கார் ரயில் பாதையின் குறுக்கே செலுத்தப்பட்டதாக கணேமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா, மேல் யாகொட பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ரயிலில் மோதிய கார், ரயிலுடன் யாகொட நிலையத்திற்குள் வந்தபோது, ரயிலுக்கும் யகொட நிலையத்தின் நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொண்டது.
குறித்த புகையிரத கடவை யாகொட புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து காரணமாக காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், கவனக்குறைவாக ரயில் தண்டவாளத்தில் கார் புகுந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் காரணமாக, பிரதான ரயில் பாதையின் கீழ் ரயில்களில் சிறிது தாமதம் ஏற்பட்ட போதிலும், தற்போது ரயில் இயக்கம் வழமைக்குத் திரும்பியுள்ளது.