இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (17) நண்பகல் லண்டனை வந்தடைந்தார்.
லண்டன் சென்றடைந்த ஜனாதிபதியை வரவேற்க பிரித்தானிய மன்னரின் விசேட தூதுவர் பிரதி லெப்டினன்ட் டேவ் ஈஸ்டன் மற்றும் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி எதிர்வரும் புதன்கிழமை (21) அதிகாலை நாடு திரும்பவுள்ளார். நாளை (19) லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவர் லண்டன் சென்றுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி அவர் இலங்கையில் இல்லாத காலப்பகுதியில் தனக்கு கீழ் உள்ள அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களுக்கு செயற்பாட்டு அமைச்சுப் பதவிகளுக்கான பொறுப்புக்களை வழங்கியுள்ளார்.