கடன் சுமை இருந்தாலும் பங்களாதேஷ் இலங்கையாக மாறாது என பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளதர்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அரசுமுறைப் பயணமாக (செப்.5) இந்தியா வரவுள்ளார்.
இந்த நிலையில், அவர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கையில், இந்தியா குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார்
எவ்வாறாயினும், பங்களாதேஷின் பொருளாதாரம் இன்னும் வலுவாக இருப்பதாகவும், கொரோனா தொற்றுநோயை எதிர்கொண்ட பொருளாதாரம் தற்போது உக்ரைன்-ரஷ்யா போரின் விளைவுகளை எதிர்கொள்வதாகவும் பங்களாதேஷ் பிரதமர் குறிப்பிட்டார்.
தற்போதைய நிலவரப்படி பங்களாதேஷும் இலங்கையாக மாறும் என கூறுகின்றார்கள். ஆனால் அது நடக்கவே நடக்காது, வளர்ச்சித் திட்டங்களிலும், கடன் பெறுவதிலும் நாட்டுக்கு என்ன இலாபம்? குடிமக்கள் எவ்வாறு பயனடைவார்கள்? ஆய்வு செய்யாமல் எந்த திட்டத்திற்கும் பணம் ஒதுக்கப்படாது என பிரதமர் ஷேக் ஹசீனா கூறியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியா பங்களாதேஷ் இடையே நெருங்கிய ஒத்துழைப்பு உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரின்போது, அங்கு சிக்கியிருந்த இந்திய மாணவர்களை போலந்து வழியாக மீட்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்தார்.
அப்போது, உக்ரைனில் சிக்கியிருந்த எங்களது மாணவர்களையும் மீட்டு வந்து தாயகத்தில் சேர்த்தனர்.
இதன் மூலம் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவை நீங்கள் பார்க்கலாம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கெரோனா காலத்தில், பங்களாதேஷிற்கு மட்டுல்லாமல் சில தெற்காசிய நாடுகளுக்கும் இந்தியா கொரோனா தடுப்பூசி வழங்கி உதவியது.
இது உண்மையில் மிகவும் பெரிய உதவி. இதற்காவும் பிரதமர் மோடிக்கு நன்றி கூறுகிறேன். 1971ஆம் ஆண்டு போரின் போதும், அதற்குப் பிறகும் இந்தியா பங்களாதேஷிற்கு துணையாக இருந்துள்ளது. இந்தியா எங்களது பரிசோதிக்கப்பட்ட நல்ல நண்பன்’ என்று கூறினார்.