Gold கிண்ணத்துக்கான கால்பந்து சுற்றுபோட்டியின் லீக் ஆட்டத்தில் திஹாரி யூத் (Thihariya Youth) அணியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி கஹட்டோவிட்ட எப்.சி (Kahatowita FC) அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
கம்பஹா ஸ்ரீ போதி மைதானத்தில் இந்த போட்டிகள் இடம்பெற்றது.
மிகவும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய KFC அணிக்கு ஆட்டம் தொடங்கிய முதல் பத்தாவது நிமிடத்தில் அறிமுக வீரர் அம்மார் பெற்றுக்கொடுத்த கோல் வெற்றிப் பாதையை இலகுவாக்கியது.
திஹாரி யூத் அணி எவ்வளவு முயற்சி செய்தும் முதல் பாதி 1-0 ரீதியில் நிறைவு பெற்றது.
இரண்டாம் பாதியில் இரு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல என்ற மனோபாவத்துடன் விளையாடினாலும் அணியால் போட்டியை சமன் செய்ய முடியவில்லை.
பிரதேச அணி ஒன்று Super league விளையாடிய அனுபவம் உள்ள திஹாரி யூத் அணியை வெற்றி கொண்டது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.