மட்டக்களப்பு மத்தி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி கல்விக் கோட்டத்திற்குற்பட்ட மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை முதல்வர் அஷ்ஷெய்க் யூ.எல்.மன்சூர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக பங்கேற்று கட்டடத்தினை திறந்து வைத்தார்.
நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது கடந்த வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சகல துறைகளிலும் உயர் சித்தியடைந்த மாணவிகள் கொளரவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின்போது கட்டடத்தினை அமைப்பதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி கொளரவிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.
10 கோடி செலவில் கிழக்கில் அமைக்கப்பட்ட முதலாவது மூன்று மாடி பாடசாலை கட்டடம் இதுவாகும்.