சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுவாக அப்பதவியில் மன்னரே பொறுப்பு வகிப்பார். இளவரசர் ஏற்கெனவே சில ஆண்டுகளாக நாட்டின் ஆட்சியாளராகச் செயல்படும் நிலையில் அவரது அதிகாரம் தற்போது அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் சிலர் தெரிவித்துள்ளார்கள்.
இளவரசர் முகமது அடுத்த மன்னராகும் பொறுப்பில் உள்ளார். 2015-ஆம் ஆண்டிலிருந்து மன்னராக இருக்கும் அவரது 86 வயதுத் தந்தை இவ்வாண்டு மட்டும் இரண்டு முறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சவூதி அரேபியாவில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சரவை மாற்றத்தில் உள்துறை, வெளியுறவு, எரிசக்தி ஆகியவற்றின் அமைச்சர் பொறுப்புகளில் மாற்றமில்லை.
இதேவேளை, மற்றொரு அரச ஆணையில், சவூதி அரசர் பட்டத்து இளவரசர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவை மறுசீரமைத்தார்.
இராணுவ துணை அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மானை இராணுவ அமைச்சராக நியமித்து மன்னர் சல்மான் அரசாணையும் வெளியிட்டார். புதிய கல்வி அமைச்சராக யூசுப் பின் அப்துல்லா அல்-பென்யான் நியமிக்கப்பட்டுள்ளார்.
MbS என அழைக்கப்படும் பட்டத்து இளவரசர், பாதுகாப்பு அமைச்சராகவும், உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளராகவும், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாகவும் உள்ள சவூதி அரேபியாவின் நடைமுறை ஆட்சியாளராக இருந்துள்ளார்.
பட்டத்து இளவரசரின் இளைய சகோதரரான இளவரசர் காலித் பின் சல்மான், முன்னர் பாதுகாப்பு துணை அமைச்சராகப் பணியாற்றினார்.
இளவரசர் முகமது 2017 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து சவூதி அரேபியாவை தீவிரமாக மாற்றியுள்ளார். ஏனெனில் அவர் எண்ணெய் சார்ந்து பொருளாதாரத்தை திசைதிருப்பும் முயற்சிகளை வழிநடத்தினார். பெண்ககளுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதித்தார் மற்றும் சமூகத்தின் மீது மதகுருக்களின் அதிகாரத்தை கட்டுப்படுத்தினார்.
எவ்வாறாயினும், அவரது சீர்திருத்தங்கள், ஆர்வலர்கள், அரச குடும்பங்கள், பெண்கள் உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் தொழிலதிபர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், எதிர்ப்பின் மீது பெரும் ஒடுக்குமுறையுடன் வந்துள்ளன.
எவ்வாறாயினும் 2018 இல் இஸ்தான்புல்லில் உள்ள ராஜ்யத்தின் தூதரகத்தில் சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டது அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியது மற்றும் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நட்பு நாடுகளுடன் இராச்சியத்தின் உறவுகளை சீர்குலைத்தருந்தமை குறிப்பிடத்தக்கது.