வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌத்தை சந்தித்துள்ளார்.
இலங்கையில் எதிர்கால சவூதி முதலீடு மற்றும் சிறந்த இருதரப்பு பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடினார்.
மேலும் இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கான கூடுதல் வேலை வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டுளளது.
இதேவேளை அலிசப்ரி உஸ்பெகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் விளாடிமிர் நோரோவை சந்தித்து இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களையும், மத்திய மற்றும் தெற்காசியாவிற்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்துவது உட்பட பலதரப்பு மன்றங்களில் மேலும் ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தார்.