வழமைக்கு திரும்பிய குடிவரவு, குடியகல்வு திணைக்கள தரவுக் கட்டமைப்பு

Date:

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களில் உள்ள தரவுக் கட்டமைப்பு வழமைக்கு திரும்பியுள்ளதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே சாதாரண மற்றும் ஒருநாள் சேவையின் அடிப்படையிலான கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் விசா விநியோக சேவைகள் என்பன வழமைப் போல் இடம்பெறுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் நேற்று (13) காலை முதல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது.

இதன்காரணமாக கடவுச்சீட்டு விநியோகம் உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தன.

குறித்த சேவைகளை பெறச் சென்றவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

22வது திருத்தத்திற்கு எதிராக சஜித் ஆர்ப்பாட்ட களத்தில்!

அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்யப்பட்ட...

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி...

அனோஜனுக்காக மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள அனோஜன் சிவராசாவை குறித்த தண்டனையிலிருந்து...

பத்தரமுல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்: 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக SJB போராட்டம்

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி...