அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயேட்சையாக இணைந்த எம்.பி.க்கள் குழுவின் புதிய கூட்டணி இன்று அறிவிக்கப்படவுள்ளது.
கூட்டணியின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், புதிய கூட்டணியின் பெயர் மற்றும் அதன் தலைவர் யார் என்பது இன்று அறிவிக்கப்படும் என அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்பட்ட ஜனநாயக இடதுசாரி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று உருவாகும் புதிய கூட்டணி இந்த நாட்டின் அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் புதிய கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தற்போதுள்ள அரசியலமைப்பை மாற்றி சித்தாந்த அரசியல் வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதே புதிய கூட்டணியின் பிரதான நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.