ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (26) அதிகாலை ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டை விட்டு வெளியேறவுள்ளார்.
ஜப்பானுக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்.
மேலும் ஜனாதிபதி, இந்த விஜயத்தின் போது ஜப்பானிய பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
அதன் பின்னர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸ் செல்ல உள்ளார்.
பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது ஜனாதிபதி விக்கிரமசிங்க பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்போங் மார்கோஸ் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளார்.
ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.