தென்கிழக்கு தாய்வான் கடலில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 300 கிலோமீட்டர்களுக்குள் (186 மைல்) கடலோரப் பகுதியில் ஆபத்தான சுனாமி அலைகள் எழக்கூடும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாய்வானின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
தாய்வானின் கிழக்கு கடற்கரையில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6. அலகாக பதிவாகியிருந்தது.
இதன் எதிரொலியால் தாய்வான் அருகே உள்ள தொலைதூர தீவுகளுக்கு ஜப்பான் வானிலை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இன்று மாலை 4 மணியளவில் ஒரு மீட்டர் உயர அலைகள் எழும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலநடுக்கம், புஜியன், குவாங்டாங், ஜியாங்சு மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகள் தெளிவாக உணரப்பட்டதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது.