பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன திரிபோஷ மா தொடர்பில் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, திரிபோஷாவில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்துள்ளார்.
திரிபோஷாவில் ஆபத்தான அளவு அஃப்லாடாக்சின் இருப்பதாக பல சுகாதார சங்கங்கள் குற்றம்சாட்டின.
இதனையடுத்து இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறிய ரம்புக்வெல்ல, தொழிற்சங்கங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், நாம் முழுமையான சேதன பசளை பாவனைக்கு மாறிய வேளையில் திரிபோஷ உற்பத்திக்கான மூலப்பொருளான சோளத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
இது தொடர்பில் பிரச்சினை நிலவியது அதனை நான் மறுக்கவில்லை. கர்ப்பிணிகளுக்கான திரிபோஷாவுக்கான தட்டுப்பாடானது யுனிசெப்பின் உதவியுடன் அது நிவர்த்திக்கப்பட்டது.
எவ்வாறாயினும், திரிபோஷவில் எஃப்ளொடொஸின் அடங்கியுள்ளதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது என பொறுப்புடன் கூறுகிறேன் எனவும் திரிபோஷவில் நச்சு உள்ளதாக கூறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை எங்களிடம் 14 வகையான அத்தியாவசிய மருந்து வகைகள் போதுமான அளவு இருப்புக்கள் மற்றும் 383 வகையான அத்தியாவசிய மருந்துகளை முகாமைத்துவ மட்டத்தில் வைத்துள்ளோம் என சுகாதார அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.