பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்னவை விடுதலை செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் எந்த ஒரு பயங்கரவாதச் செயலிலும் ஈடுபடவில்லை, சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் பேசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருப்பது நியாயமற்றது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
இதேவேளை நடிகை தமிதா அபேரத்ன இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஜனாதிபதி செயலகத்துக்குள் அத்துமீறி பிரவேசித்து அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பத்தரமுல்லவில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.