பாகிஸ்தான் வெள்ளம்: மானிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் துருக்கியின் 14ஆவது விமானம்!

Date:

துருக்கியிலிருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு 14வது விமானம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்குச் சென்றது.

இந்த விடயத்தை துருக்கியின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதன்போது, மில்லியன் கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுக்கு துருக்கி தொடர்ந்து உதவிக் கரம் நீட்டி வருகின்றது.

அதற்கமைய அரசாங்கம், நகராட்சிகள் மற்றும் துருக்கி அரசு சாரா அமைப்புகளின் ஆதரவுடன் இதுவரை 14 விமானங்கள் மற்றும் 12 ரயில்களை பாகிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிப் பொருட்களை பாகிஸ்தானுக்கு கொண்டு செல்வதாக துருக்கியின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 25,000 க்கும் மேற்பட்ட கூடாரங்கள், 409,000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் துப்புரவுப் பொருட்கள், 38,000 போர்வைகள், படுக்கைகள் மற்றும் தலையணைகள் மற்றும் 2.2 மில்லியனுக்கும் அதிகமான மருத்துவ உபகரணங்களுடன் குறித்த விமானங்கள் மற்றும் ரயில்கள் பாகிஸ்தானுக்கு செல்கின்றன.

12 பணியாளர்கள், மூன்று பேர் அடங்கிய மருத்துவக் குழு மற்றும் எட்டு அதிகாரிகள் உட்பட மொத்தம் 23 பேர் பாகிஸ்தானில் உதவி விநியோகத்தை ஒருங்கிணைக்கவும் தற்காலிக கூடாரங்களை அமைப்பதில் உதவவும் பணியாற்றி வருகின்றனர் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்பான சம்பவங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,576 ஆக உயர்ந்துள்ளது என்று பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சுமார் 803,400 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன, அதேவேளையில் 1.21 மில்லியன் வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

வெள்ளம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள் இப்போது கூடாரங்களில் வாழ்கின்றனர்.

தற்போது, ​​பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பகுதி தண்ணீருக்கு அடியில் உள்ளது, ஏனெனில் பாரிய மழை மற்றும் உருகும் பனிப்பாறைகள் நாட்டின் முக்கிய சிந்து நதி நிரம்பி வழிகின்றன.

Popular

More like this
Related

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...