பொதுமக்கள் விரைவில் நான்காவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும்!

Date:

நாட்டில் கையிருப்பிலுள்ள பைசர் தடுப்பூசிகளை மேலும் 06 வார காலத்திற்கு மாத்திரமே பயன்படுத்த முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, நான்காவது கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் மிக விரைவில் பெற்றுக்கொள்ள வேண்டும் என கொரோனா ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் 15 வீதமான மக்கள் மாத்திரமே நான்காவது கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது 07 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக கொரோனா ஒழிப்பு தொடர்பான இணைப்பாளர், வைத்தியர் அன்வர் ஹம்தானி கூறியுள்ளார்.

Popular

More like this
Related

பேஸ்புக்கில் AI மூலம் இயங்கும் போலி பெண் கணக்குகள்!

பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட...

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை எட்டியது!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 63,835 டெங்கு நோய்த் தொற்றாளர்கள் அடையாளம்...

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே சமூக ஊடகப் பயன்பாட்டைக் குறைக்க அரசு திட்டம்: பிரதமர்

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகப் பாவனையைக் குறைப்பதற்கான முன்னோடித் திட்டம்...

அமெரிக்க – ஈரான் சமாதான ஒப்பந்தம் : யுத்த வெறியர்களான அமெரிக்கா – இஸ்ரேல் இடையே பிளவு

-லத்தீப் பாரூக் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு சமாதான ஒப்பந்தம், ஈரானுக்கு 300...