புத்தளம் வெட்டாலை அஸன் குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயத்தின் (1972.09.01-2022.09.01) பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று நடைபெறுகின்றது.
புத்தளம் நகரில் அமைந்திருந்திருக்கின்ற இந்த பாடசாலையானது பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியில் அண்மைக்காலங்களில் பல அடைவுகளைக் கண்டு வருகின்ற ஒரு பாடசாலையாக இருக்கின்றது.
இந்த சூழ்நிலையில் பாடசாலையின் 50ஆவது ஆண்டை நிறைவையொட்டிய பொன்விழா கொண்டாட்டங்கள் விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதனையொட்டி கலைநிகழ்ச்சிகள், போட்டி நிகழ்ச்சிகள், கவியரங்கு, பொதுக்கூட்டங்கள் என இன்னோரன்ன பல நிகழ்ச்சிகளை பாடசாலை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதேவேளை புத்தளம் வரலாற்றில் எந்த பாடசாலையும் படைத்திடாத சாதனை ஒன்றை அஸன் குத்தூஸ் சாதித்துள்ளது.
தாய்மடி பிறந்து நகரபிதா, பாராளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர் போன்ற புத்தளம் அரசியல் வரலாற்றில் தனக்கென்று ஒரு தனித்துவ இடத்தை தனதாக்கி, குடும்ப ஆட்சியை ஒழித்து, ஏழைகளும் அரசாளலாம் என்று சாதித்து, அதிகாரங்களை பெற்று மண்ணறை வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் மர்ஹும் கே.ஏ.பாயிஸ் அவர்களை இந்த புத்தளம் மண்ணிற்கு தந்துதவியது இந்த அஸன்குத்தூஸ் தான்.
அகவை 50ஐ எட்டி இருக்கும் அஸன்குத்தூஸ் பாடசாலை சகல துறைகளிலும் சாதித்து ஒரு முன்னணி பாடசாலையாக உயர்ச்சி அடைய பாடசாலையின் பொன்விழா தினத்திலே பிரார்த்திப்போம்.