உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தை கலைக்கும் வகையில் பொலிஸார் கண்ணீர் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை , நீர்த்தாரை பிரயோகம் செய்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலையை நிலவுவதாகவும் போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
சுகாதார அமைச்சுக்கு அண்மித்த பகுதியில் போராட்ட பேரணி சென்ற வேளையிலேயே இந்த கண்ணீர் புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தப்பட்டது.