போர்க்குற்றத் தீர்மானம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் கடுமையாகச் செயற்படுகின்றன!

Date:

இந்த ஆண்டு இலங்கை தொடர்பான உத்தேச பிரேரணையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்குவதற்கான பரிந்துரையை உள்ளடக்குவதற்கு தமிழ் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அதற்கமைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் டெலோ கட்சியின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் ஜெனீவா சென்றுள்ளதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில் பிரித்தானியரால் இலங்கை தொடர்பான தீர்மானம் தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் மேற்படி பரிந்துரையை உள்ளடக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குருஸ்வாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

அமர்வின் ஆரம்பத்தில் இலங்கை தொடர்பான பதில் உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கையில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பல முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் சுரேந்திரன் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் விசேட அழைப்பின் பேரிலேயே தாம் ஜெனீவா சென்றுள்ளதாகவும், கடந்த செப்டம்பர் 15ஆம் திகதி முதல் இலங்கை தொடர்பான கலந்துரையாடல்களை சபையின் உறுப்பு நாடுகளுடன் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் சில தினங்களில் ஜெனிவா செல்ல உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடேக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில் இலங்கை தொடர்பில் மிகவும் வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமானது எனவும், சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளின் ஆதரவையும் வழங்குமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...