கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலுக்கான கொடுப்பனவுகள் செப்டெம்பர் 30 வெள்ளிக்கிழமையன்று செலுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த கப்பலில் 36,000 மெட்ரிக் தொன் எரிபொருட்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், பணம் செலுத்தப்படாததால், டீசல் ஏற்றிச் செல்லும் மேலும் இரண்டு கப்பல்களும், பெற்றோல் ஏற்றிச் சென்ற மற்றுமொரு கப்பலும் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளன.
மேலும், எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கைக்கு வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பலுக்கான ஆரம்ப கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.