மீண்டும் அதிகரிக்கும் அரிசியின் விலை!

Date:

நாட்டில் அடுத்த மாதம் 1-ம் திகதி முதல் அறவிடப்படவுள்ள 2.5% சமூக பாதுகாப்பு வரியை விவசாய நடவடிக்கைகளில் இருந்து நீக்காவிட்டால் அன்றைய தினம் முதல் ஒரு கிலோ அரிசியின் விலையை 6.00 ரூபாவால் அதிகரிக்க நேரிடும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், விவசாய நடவடிக்கைகளில் இருந்து உரிய வரியை நீக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் அதற்கான பதில் கிடைக்கவில்லை என அச்சங்கத்தின் தலைவர் முதித பெரேரா தெரிவித்தார்.

எனவே, அரிசிக்கான உத்தரவாத விலையை 6.00 ரூபாவினால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஒருவேளை, விலை உயர்த்தப்படாவிட்டால், ஒரு கிலோ அரிசியின் கொள்வனவு விலை 3.00 ரூபாவினால் குறைக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...