மைத்திரிக்கு அதிக அதிகாரம்: சுதந்திரக் கட்சிக்குள் குழப்பம்!

Date:

மத்திய குழு தீர்மானத்தை மீறி செயற்படுபவர்களை கட்சியிலிருந்து நீக்கக் கூடிய அதிகாரத்தை தவிசாளருக்கு வழங்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் இவ்வாறான அதிகாரத்தை தவிசாளருக்கு வழங்குவதன் மூலம் கட்சியின் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்படுவதாகக் குறிப்பிட்டு சுதந்திர கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று (02) வெள்ளிக்கிழமை கொழும்பில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் யாப்பு திருத்தம் அதன் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் இந்த திருத்தத்துக்கு கட்சியின் பல முக்கியஸ்தர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...