லிட்ரோ எரிவாயுவின் விலையை எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலும் குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, புதிய எரிவாயு விலை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு விலை 4, 664 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.