பாகிஸ்தான் நாட்டின் வெள்ள பாதிப்புக்கு தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இந்த வருடம் பருவமழையானது வரலாறு காணாத அளவில் சீற்றத்துடன் பொழிந்து கடும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.
இதில் சிந்த், பலுசிஸ்தான், கைபர் பக்துன்கா ஆகிய மாகாணங்களில் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளன.
அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறிய தகவலின் படி, இந்த பருவமழை பாதிப்பில் சிக்கி இதுவரை 1,033 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டின் 8.09 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள், 3,451 கிமீ சாலைகள், 149 பாலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.
9.49 லட்சம் வீடுகள் சேதமடைந்த நிலையில், சுமார் 7 லட்சம் கால்நடைகள் இந்த வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளன.
கடும் மழை வெள்ள பாதிப்பால் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானிற்கு ட்விட்டரில் தனது அனுதாபங்களை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரு நாடுகளுக்குமான வர்த்தக உறவிலும் ஆக்கப்பூர்வமான மாற்றம் மீண்டும் தொடங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் 370 சட்டம் நீக்கிய பின் இந்தியாவுடனான வர்த்தக உறவை பாகிஸ்தான் முடக்கிக் கொண்டது.
இந்நிலையில், தற்போதைய பேரிடர் சூழலை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் தரப்பு 3 ஆண்டுகளுக்குப் பின் வர்த்தகத்தை தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் தரப்பு கோரிக்கை வைத்தால் அந்நாட்டிற்கு உதவத் தயார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தாம் பகிச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தனது கவலையை தெரிவித்துள்ளார். அதேபோல் அந்நாட்டிற்கு தேவையான உதவிகளை அனுப்புவது தொடர்பாக தற்போது எந்த முடிவும் எட்டவில்லை.
இதேவேளை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தலைமையிலான துருக்கிய தூதுக்குழு, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பை சந்தித்து வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பெறுமதியான உயிர்கள் மற்றும் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்தமை தொடர்பில் ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனின் ஆழ்ந்த அனுதாபங்களை பிரதிநிதிகள் குழு வெளிப்படுத்தியுள்ளது.
துருக்கியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடாரங்கள், உணவுப் பொருட்கள், மருந்து, அவசரகால நிவாரணப் பொருட்கள் உள்ளிட்ட 11 துருக்கி ராணுவ விமானங்களும், இரண்டு ” ரயில்களும்” பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.