நாட்டில் பெய்துவரும் கடும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தன அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கு முன்கூட்டியே தயாராகுமாறு அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் மாகாண அரசாங்க அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே மற்றும் நாட்டின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.