10 நிமிடங்களில் ஒரு இலட்சம் ரயில் இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன!

Date:

மக்கள் சுமார் 10 நிமிடங்களில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ரயில் இருக்கைகளை ஒன்லைனில் முன்பதிவு செய்ய முயற்சித்ததால் முந்தைய இருக்கை முன்பதிவு செயல்முறையை மறுசீரமைக்க வேண்டியுள்ளதாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் தினமும் காலை 10.00 மணிக்கு ரயில் இருக்கைகளுக்கான ஒன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்ட பிறகு, இருக்கை முன்பதிவு சுமார் 10.10 மணிக்கு முடிவடைகிறது என்றும், அதன்படி இருக்கை முன்பதிவுக்கான 14 நாட்கள் அவகாசம் 30 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி கூறினார்.

முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டிய ரயில் இருக்கைகளில் 60 சதவீதம் ஆன்லைனிலும், 40 சதவீதம் ரயில் நிலையத்திலும் கிடைக்கும் என்றும், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பிற போக்குவரத்துச் செலவுகள் அதிகமாக உள்ளதால், ஏ.டி. ரயில்களுக்கான வலுவான தேவை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...