15 பிரதமர்களை கண்ட மதிப்புக்குரிய மங்கை எலிசபெத் மகாராணி!

Date:

இங்கிலாந்தின் அரச பதவியை நீண்ட காலம் அலங்கரித்த இரண்டாம் எலிசபெத் காலமானார். 96 வயதான அவர் 70 ஆண்டு காலம் பிரிட்டன் ராணியாக பதவி வகித்தார்.

21 ஏப்ரல் 1926 அன்று லண்டனில் உள்ள மேஃபேரில் பிறந்தவர் எலிசபெத் மகாராணி. பிரிட்டிஷ் வரலாற்றில் சுமார் 70 ஆண்டுகாலம் அரசபதவியில் இருந்தவர். தனது பதவிக்கால வரலாற்றில் 15 பிரதமர்களை பதவியேற்று வைத்துள்ளார்.

பிரிட்டனில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் 1952-ம் ஆண்டு மரணம் அடைந்தபோது, நாட்டின் ராணியாக பதவியேற்றவர் அவரது 25 வயது மகள் 2-ம் எலிசபெத். அப்போது பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில், அதன் பின்னர் வந்த சர் ஆண்டனி ஈடன், போரிஸ் ஜான்சன் தொடங்கி, லிஸ் ட்ரஸ் வரை 15 பிரதமர்களை அவர் நியமித்து அவர்களோடு பணியாற்றி உள்ளார்.

இப்போது 96 வயதாகும் ராணி எலிசபெத், 3 நாட்களுக்கு முன்பு பிரிட்டனின் புதிய பிரமதராக தேர்வு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ்ஸுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

கணவர் மறைவு: கடந்த 2021-ம் ஆண்டு ராணி எலிசபெத்தின் கணவரும், எடின்பரோ கோமகனுமான பிலிப் காலமானார். கணவர் மறைவையடுத்து அவரது உடல் நலம் குன்றியது.

குடும்பத்தார்: பிரிட்டன் ராணி எலிசபெத் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவரது மகன்களும், இளவரசர்களான சார்லஸ், எட்வர்ட், ஆண்ட்ரூ, மகள் ஆனி ஆகியோர் அவருடனேயே இருந்தனர்.

ராணியின் மூத்த மகனான இளவரசர் சார்லஸின் மகன் வில்லியமும் அவருடனேயே இருந்தார். வெளிநாட்டில் இருக்கும் மற்றொரு மகன் ஹாரி, ஹாரியின் மனைவி மேகன் ஆகியோர் லண்டனுக்கு வந்தனர்.

ராணி எலிசபெத் வசித்து வரும் பக்கிங்ஹாம் அரண்மனையில் உள்ள பாதுகாவலர்கள் தங்களது பணியை மாற்றும் நிகழ்ச்சி சேஞ்ச் ஆஃப் கார்ட் என்று அழைக்கப்படுகிறது.

15 பிரதமர்களை கண்ட மகாராணி

இரண்டாம் உலகப்போரின் தாக்கத்திலிருந்து உலகம் மீளாத காலத்தில் ராணியாக பதவியேற்ற எலிசபெத், பிரிட்டன் சாம்ராஜ்யம் காமன் வெல்த் கூட்டமைப்பாக மாறியதற்கும் சாட்சியாக வாழ்ந்துள்ளார்.

பனிப்போர் காலத்தில் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் பங்கேற்றது, விலகியது என்று பல அரசியல் நிகழ்வுகளை கண்டுள்ளார். தனது பதவிக்காலத்தில் சர்ச்சில் முதல் லிஸ் டிரஸ் வரை 15 பிரதமர்களைக் கண்டுள்ளார்.

எலிசபெத்தின் பதவிக்காலத்தில் 1951ஆம் ஆண்டில் பதவியேற்ற முதல் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில் 1874ஆம் ஆண்டில் பிறந்தவர்.

இதிலிருந்து நூறாண்டுகளுக்கு பின்னர் அதாவது 1975ஆம் ஆண்டில் பிறந்த லிஸ் டிரஸ்-ஐ செப்டம்பர் 6ஆம்  திகதி எலிசபெத் பிரதமராக நியமித்தார்.

தனது பதவிக்காலம் முழுவதும் பிரதமர்களுடன் வாராந்திர கலந்துரையாடல் மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார் இரண்டாம் எலிசபெத். அந்த பிரதமர்களின் பெயர் மற்றும் ஆட்சி காலம் பின்வருமாறு.

வின்ஸ்டன் சர்ச்சில், 1951-1955ஆண்டனி ஈடன், 1955-1957. 1956 ஹரோல்ட் மேக்மில்லன், 1957-1963 அலெக் டக்ளஸ்-ஹோம், 1963-1964 ஹரோல்ட் வில்சன், 1964-1970 மற்றும் 1974-76 எட்வர்ட் ஹீத், 1970-1974ஜேம்ஸ் காலகன், 1976-1979. மார்கரெட் தாட்சர், 1979-1990 ஜான் மேஜர், 1990-1997 டோனி பிளேர், 1997-2007 கோர்டன் பிரவுன், 2007-2010டேவிட் கேமரூன், 2010-2016 தெரசா மே, 2016-2019 போரிஸ் ஜான்சன், 2019 -2022லிஸ் டிரஸ், செப்டம்பர் 2022 முதல் தற்போது வரை.

போருக்கு நடுவே வாழ்க்கை

இதற்கிடையே தான் 1939ல் 2ம் உலகப்போர் தொடங்கியபோது ராணி எலிசபெத்தின் தாய் இங்கிலாந்தை விட்டு வெளியேறி கனடாவுக்குச் செல்ல வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இருப்பினும், அவர் தாயார் வெளியேற மறுத்துவிட்டார்.

எலிசபெத் தனது சகோதரி மற்றும் தாயுடன் லண்டன் நகரத்தை விட்டு வெளியேறினார். அவர்கள் போரின் பெரும்பகுதியை விண்ட்சர் கோட்டையில் கழித்தனர்.

மேலும் எலிசபெத் தனது முதல் வானொலி ஒலிபரப்பை 1940ல் பிபிசியின் சில்ட்ரன்ஸ் ஹவரில் வழங்கினார். அதன்பிறகு பிரிட்டிஷ் இராணுவத்தின் பெண்கள் பிரிவு சார்பில் ஒரு கௌரவ பதவியை பெற்றார்.

பெருவாழ்வுடன் பெரும் புகழுடன் வாழ்ந்து மறைந்துவிட்டார் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்.

(நன்றி: இணையம்)

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...