Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷாகள் அழிக்கப்பட்டன!

Date:

Aflatoxin அடங்கியுள்ள திரிபோஷா அழிக்கப்பட்டுள்ளதனால், அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா தொடர்பில் எந்தவித சந்தேகமும் இன்றி இன்று முதல் அதனை பயன்படுத்த முடியும் என கர்ப்பிணி தாய்மார் உள்ளிட்ட அன்னையருக்கு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

திரிபோஷாவை உணவாக கொள்வதற்கு தேவையற்ற அச்சத்தை கொண்டிருக்க வேண்டாம் என்றும் இது தொடர்பான உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியிடப்படுவதாகவும் குடும்ப சுகாதார சேவை அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

Aflatoxin அடங்கியிருப்பதாக பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்ட திரிபோஷா பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சிகிச்சை சேவை நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ள திரிபோஷாவை பயன்படுத்த முடியும் என்றும் பணிப்பாளர் தெரிவித்தார்.

3 மாதங்களுக்கு முன்னர் திரிபோஷா நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட திரிபோஷாவில் Aflatoxin அளவு கூடுதலாக இருந்தமை ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு Aflatoxin இருந்ததாக உறுதி செய்யப்பட்ட திரிபோஷா தற்பொழுது அழிக்ககப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மற்றும் திரிபோஷா நிறுவனம் உறுதி செய்துள்ளன.

Popular

More like this
Related

காசாவில் நெஞ்சை உலுக்கும் கொடூரம்: தந்தையை மிரட்ட குழந்தையை சித்திரவதை செய்த இஸ்ரேலியப் படை!

காசா முனையில் நிலவும் போர்ச் சூழலில், மனிதநேயமற்ற முறையில் ஒரு வயதுக்...

சுயதொழில் உபகரணங்கள் மற்றும் கல்வி நிதியுதவி வழங்கி வைப்பு: பஹன மீடியாவின் மற்றுமோர் மனிதாபிமானப் பணி

இலங்கையில் ஊடகப்பணியைத் தாண்டி, சமூக மேம்பாட்டுப் பணிகளிலும் பஹன மீடியா நிறுவனம்...

கடும் வெப்பமான வானிலை அடுத்த மாதம் வரை நீடிக்கும்.

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம்...

MPL-2026 சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியர்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டு...