அதியுயர் வலயங்கள் பிரகடனத்துக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்

Date:

அளுத்கடை மேல் நீதிமன்ற வளாகத்தை உயர் பாதுகாப்பு வலயமாக நியமிப்பதற்கான தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னால்  உரையாற்றிய   நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி ரசிக சஞ்சீவ, 30 வருட யுத்த காலததில் கூட  உயர் நீதிமன்ற வளாகம் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்படவில்லை.

இதன்போது கொழும்பின் சில பகுதிகளை அதியுயர் வலயங்களாக அறிவித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை போராட்டக்காரர்கள், இலங்கை அரசாங்கத்தின் அடக்கு முறைக்கும் எதிர்ப்பு வெளியிட்டிருந்ததுடன், காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கும் கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தட்டுப்பாடு: தமிழ், முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு!

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை நிலவுவதால், நாளாந்தம் வெளியிடப்படும்...

விசேட தேவையுடையோருக்கு புதிய பஸ்கள் இறக்குமதி

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப்...

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: இலங்கையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான்...

ஊழலில் வீழ்ச்சி கண்டு வரும் இலங்கை

Transparency International ஊடாக வெளியிடப்பட்டுள்ள 2025 ஊழல் குறிகாட்டி பட்டியலில் (CPI) ...