இந்து-முஸ்லிம் மோதலால் இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் பதற்றம்: அமைதி காக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

Date:

கிழக்கு இங்கிலாந்தில் உள்ள லெய்செஸ்டர் நகரில் உள்ளூர் இந்து மற்றும் முஸ்லிம் குழுக்களுக்கு இடையே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வன்முறை வெடித்ததை அடுத்து மக்கள் அமைதியாக இருக்குமாறு இங்கிலாந்து காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

அதேநேரம் இந்து முஸ்லிம் மக்களை சமூகத் தலைவர்கள் அமைதி காக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆகஸ்ட் 28 அன்று துபாயில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து இரு குழுக்களிடையே பதற்றம் ஏற்பட்டது.

லெய்செஸ்டர்ஷைர் காவல்துறை   “வன்முறை அல்லது ஒழுங்கீனத்தை பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று எச்சரித்தது.

ஞாயிற்றுக்கிழமை பதற்றம் அதிகமாக இருந்ததுடன், வீதிகளில் அதன் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகவும், இளைஞர்கள் மேலும் மோதலில் ஈடுபடுவதைத் தடுக்க திடீர் சோதனைகளைத் தொடங்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷம் எழுப்பும் கும்பல், ஆசிய சமூகத்தின் மையமான பெல்கிரேவ் சாலை வழியாக அணிவகுத்துச் செல்லும் காட்சிகளையும் படங்களையும் மக்கள் சனிக்கிழமை மாலை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில், குறித்த நபர்கள் முகமூடி அணிந்த ஆண்கள் அணிவகுத்துச் செல்வதை அவதானிக்க முடிந்தது.

பெல்கிரேவ் வீதியில் திரண்டிருந்த கும்பலின் மத்தியில் சிலர் கண்ணாடி பாட்டில்களை முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் மீது வீசியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து சமூக ஊடகங்களில் சரிபார்க்கப்படாத வீடியோக்கள் மற்றும் செய்திகளைப் பகிர்வதை நிறுத்துமாறு முஸ்லிம் தலைவர்கள் சமூக உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர், இது மேலும் குழப்பத்தை உருவாக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பை அதிகரிக்க ஏராளமான பொலிஸார் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ‘எங்கள் நாட்டில் ஊரில் வன்முறை மற்றும் ஒழுங்கீனத்தை பொறுத்துக்கொள்ள முடியாது.

நாங்கள் அமைதியாக இருக்க அழைக்கிறோம், அனைவரையும் வீடு திரும்பச் சொல்கிறோம்.

சரிபார்க்கப்பட்ட மற்றும் உண்மையுள்ள தகவல்களை மட்டும் பகிரவும்  என இங்கிலாந்து காவல் துறை டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

ஒரு மசூதி தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்தியையும் பொலிஸார் அகற்றியதையடுத்து லீசெஸ்டரின் கிழக்கில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், மக்கள் கலைந்து செல்லப்பட்டதாகவும், விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை அறிவித்தது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...