இலங்கை அணி 02 விக்கெட்டுக்களால் வெற்றி!

Date:

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் இலங்கை அணி 02 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக அபிப் ஹொசைன் 39 ஓட்டங்களையும், மெஹிதி ஹசன் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் சாமிக்க கருணாரத்ன 32 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும், வனிந்து ஹசரங்க 40 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் 184 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக குசல் மெண்டிஸ் 60 ஓட்டங்களையும், தசுன் சானக்க 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணியின் எபடோட் ஹொசைன் 51 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Popular

More like this
Related

இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்த 2வது வருடாந்திர கருத்தரங்கு: கொழும்பில்..!

மர்ஹூம் எம்.ஐ எம்.மொஹிடீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையத்தின் ஏற்பாட்டில், இலங்கை...

2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா மாத்தறையில்..!

2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா மாத்தறையில் நடைபெறவுள்ளது. சர்வதேச மகளிர்...

ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

ஈரானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஈரான்...

எப்ஸ்டீன் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்: ஊடகங்களை ஏமாற்றப் பயன்படுத்தப்பட்ட எப்ஸ்டீனின் போலி சடலம்!

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் சிறையில் மரணமடைந்த பிறகு, அவரது...