இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளரிடமிருந்து செய்தி!

Date:

சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா டுவீட் செய்துள்ளார்.

தனது டுவிட்டர் செய்தியில், சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை எட்டியதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது இலங்கை முன்னோக்கி செல்வதற்கு முக்கியமான ஒரு படியாகும் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் ஆகஸ்ட் 31 அன்று உத்தியோகப் பூர்வமாக அறிவித்தது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் 48 மாத வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் விரிவான நிதி வசதிகள் வழங்கப்படும்.

Popular

More like this
Related

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...