இஸ்தான்புல் தானிய ஒப்பந்தத்தின் கீழ் சுமார் 3.7 மில். தொன் உணவு உக்ரைன் துறைமுகங்களில் இருந்து வெளியேறியது!

Date:

3.7 மில்லியன் தொன் விவசாயப் பொருட்களுடன் மொத்தம் 165 கப்பல்கள் உக்ரைனை விட்டு வெளியேறியதாக உக்ரைன் உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐ.நா. மற்றும் துருக்கியின் உதவியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, அந்த ஒப்பந்தம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கையொப்பமானது.

ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் கருங்கடல் துறைமுகங்களில் இருந்து 169,300 தொன் விவசாயப் பொருட்களுடன் 10 கப்பல்கள் புறப்படவுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

8 கப்பல்கள் கிரேட் ஒடேசா துறைமுகத்திலிருந்து புறப்பட்டதுடன் மேலும் 2 கப்பல்கள் அவற்றின் முறை மற்றும் சாதகமான நிலைமைகளுக்காக காத்திருக்கின்றன என்றும் அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஷ்யா நாட்டை ஆக்கிரமித்து அதன் கருங்கடல் துறைமுகங்களை முற்றுகையிட்ட பின்னர் உக்ரைனின் தானிய ஏற்றுமதி சரிந்தது.

இது உலகளாவிய உணவு விலைகளை உயர்த்தியது மற்றும் ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கில் பற்றாக்குறை பற்றிய அச்சத்தை  ஏற்படுத்தியது.

உலகளாவிய முக்கிய தானிய உற்பத்தியாளரும் ஏற்றுமதியாளருமான உக்ரைன், போருக்கு முன்பு மாதத்திற்கு 6 மில்லியன் தொன் தானியங்களை அனுப்பியது.

மூன்று கருங்கடல் துறைமுகங்கள் ஜூலை 22 அன்று மாஸ்கோ மற்றும் கீவ் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் திறக்கப்பட்டன.

மேலும் இந்த துறைமுகங்கள் மாதத்திற்கு 100-150 சரக்குக் கப்பல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றி அனுப்ப முடியும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

உக்ரைன் துறைமுகங்களில் உணவு தானியங்கள் கப்பலில் ஏற்றப்படுவதை துருக்கி, உக்ரைன், ஐ.நா. அதிகாரிகள் மேற்பார்வையிடுவாா்கள்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...