எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு பாராளுமன்றில் அஞ்சலி

Date:

பிரிட்டனின் காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இலங்கை பாராளுமன்றில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன்று காலை 9.30 மணிக்கு சபாசாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் பாராளுமன்றம் கூடியது. இதனையடுத்து பிரதமர் குணவர்த்தன அரசாங்கத்தின் இரங்கல் செய்தியை வாசித்தார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர். இதேவேளை எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல இரங்கல் செய்தியை வாசித்தார்.

அத்துடன் மகாராணியின் மறைவையொட்டி இன்று முதல் இலங்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ததாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...