‘எலிசபெத் ராணியின் நினைவகத்தை கறைப்படுத்த அனுமதிக்கக்கூடாது’: சவூதி இளவரசரின் இங்கிலாந்து வருகைக்கு கண்டனம்!

Date:

படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் வருங்கால மனைவி, சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் ராணியின் இறுதிச் சடங்கிற்கு சர்ச்சைக்குரிய அழைப்பு விடுத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபிய பத்திரிகையாளருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ஹேடிஸ் செங்கிஸ், இளவரசர் சல்மானின் பிரசன்னம் ராணி எலிசபெத்தின் நினைவகத்தை “கறை”  படிய அனுமதிக்கக்கூடாது என்று கூறினார்.

2018 ஆம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள சவூதி  துணைத் தூதரகத்தில் கஷோகியின் கொலை மற்றும் உடல் உறுப்புகளை துடிக்க இளவரசர் ஒப்புதல் அளித்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாது 2021 இல் வெளியிடப்பட்ட அமெரிக்க புலனாய்வு அறிக்கையானது கஷோகியைக் கொல்லுவதற்கு அல்லது கடத்துவதற்கான நடவடிக்கை இளவரசரால் அங்கீகரிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது.

எனினும் ‘கஷோகி போன்ற எதிர்ப்பாளர்களை அமைதிப்படுத்த வேண்டும். இந்தப் படுகொலையைத் திட்டமிடுவதில் தனக்கு தனிப்பட்ட முறையில் தொடர்பு இல்லை என்று பட்டத்து இளவரசர் மறுத்துள்ளார்.

மேலும், இந்த கூற்றுக்களை கடுமையாக மறுத்து சமீபத்தில், அப்படியே நாங்கள் காரியங்களைச் செய்திருந்தால்’, கொல்லப்படுவதற்கான தனது முதல் 1,000 இலக்குகளில் பத்திரிகையாளர் இருக்கமாட்டார் என்றும் இளவரசர் கூறினார்.

இந்நிலையில், வெஸ்ட் மின்ஸ்டர் அபேயில் நடந்த சேவையின் போது ராணி எலிசபெத்திற்கு இரங்கல் தெரிவிக்க அழைக்கப்பட்ட 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரமுகர்கள் மற்றும் அரச தலைவர்களில் சவூதி இளவரசரும் ஒருவர்.

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ மற்றும் துருக்கியின் ரெசெப் தையிப் எர்டோகன் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகளும் இந்த விவகாரத்திற்கு அழைக்கப்பட்டனர்.

சவூதி அரேபியாவின் ராயல் தூதரகம் சனிக்கிழமையன்று இளவரசர் லண்டனுக்குப் பயணம் செய்வதை உறுதிப்படுத்தியது, ஆனால் அவரது வருகை பற்றிய விவரங்களை வெளியிடவில்லை.

இளவரசர் இறுதிச் சடங்கில் பங்கேற்பார் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை, ஆனால்   கஷோகி கொல்லப்பட்ட பிறகு அவரது முதல் பிரிட்டன் பயணம் இதுவாகும்.

உலகத் தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் பிற அரச குடும்பங்களின் உறுப்பினர்கள் உட்பட சுமார் 2,000 பேர் திங்களன்று ராணியின் சேவையில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இறுதிச் சடங்கை 4.1 பில்லியன் மக்கள் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 2 மில்லியன் பேர் நிகழ்வுக்காக தலைநகருக்கு வருவார்கள் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

எவ்வாறாயினும் படுகொலை செய்யப்பட்ட ஜமால் கஷோகியுடன் நிச்சயதார்த்தம் முடிந்த வருங்கால மனைவி செங்கிஸ் ‘ராணியின் மறைவு உண்மையிலேயே ஒரு சோகமான நிகழ்வு’ என்று கூறினார். பட்டத்து இளவரசர் இந்த துக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க அனுமதிக்கப்படக்கூடாது, மேலும் அவரது நினைவை கறைபடுத்த அனுமதிக்கக்கூடாது, எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இளவரசர் முகமதுவின் வருகைக்கு எதிராகவும், பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல்-கலிபா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர்களின் வருகைக்கு எதிராகவும் ஏற்கனவே போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

‘ராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள ரஷ்யா மற்றும் சிரியாவின் தலைவர்களுக்கு அழைப்புகள் சரியாக வரவில்லை என்றாலும், வளைகுடா மன்னர் ஹமாத் மற்றும் முகமது பின் சல்மான் போன்ற மோசமான ஆட்சியாளர்களை வரவேற்க தெளிவான இரட்டை நிலைப்பாட்டை அனுப்புகிறது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...