கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை 94 சதவீதம் உயர்ந்துள்ளது!

Date:

கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் உணவு வகையின் விலை 93.7 வீதத்தால் அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் உணவுப் பிரிவில் ஆண்டு இலட்ச பணவீக்கம் 90.9 சதவீதமாக இருந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் உணவு வகைகளில் புதிய மீன், பழங்கள், ரொட்டி, பிஸ்கட், முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அரிசி மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

இதேவேளை, ஜூலை மாதத்தில் 46.5 சதவீதமாக இருந்த உணவு அல்லாத பிரிவின் வருடாந்த புள்ளி பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 50.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.

வீடுகள், குடிநீர், மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து, ஜவுளி மற்றும் பாதணிகள் ஆகியவற்றின் விலையேற்றம் காரணமாகும்.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 64.3 சதவீதமாக அதிகரித்தது. இது கடந்த ஜூலை மாதம் 60.8 சதவீதமாக இருந்தது.

Popular

More like this
Related

டொலரின் ஆதிக்கம் முடியப்போகிறதா? ஹார்முஸ் நீரிணையும் உலக அரசியலும்.

-Dr.Ashker Aroos (Naleemi) ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) அமெரிக்காவின் அதிகாரத்திற்கு...

எரிபொருள் QR கட்டமைப்பின் செயல்திறன் மேம்பாடு

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு செயன்முறையை மேம்படுத்தி அதன் செயல்திறனை மேம்படுத்துவது...

ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் படம்பிடிப்பது தொடர்பில் சவூதிக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்...