ரோமில் உள்ள ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி சிண்டி மெக்கெய்ன் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக (25) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவருடன் அந்த அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் வந்திருந்தார்.
இந்த குழுவை வரவேற்க இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகள் குழு மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழுவும் விமான நிலையத்தில் உள்ள சிறப்பு பார்வையாளர்கள் அறைக்கு வந்தனர்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் அமெரிக்காவின் உணவு உதவித் திட்டங்களை முன்னிலைப்படுத்துவதும், இலங்கையுடனான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு மற்றும் நீடித்த பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதும் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
எதிர்வரும் 28ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், கொழும்பில் உள்ள அரச உயர் அதிகாரிகள் மற்றும் உதவி நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.