கட்டுப்படியாகாத மின்சாரக் கட்டணம், உயர் பாதுகாப்பு அல்லாத வலயங்களை உயர் பாதுகாப்பு வலயங்கள் என பெயரிடவும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சர்வ மதத் தலைவர்களினால் விசேட மாநாடு இடம்பெற்றது.
இந்த ஊடகவியலாளர் மாநாடு வெள்ளவத்தை மரைன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இலங்கை அமரபுர – ரமண்ய சாமகிரி மகா சங்க சபை மற்றும் தர்ம சக்தி அமைப்பு தமது பூரண ஆதரவை வழங்கியது.
தேசிய அளவிலான மதத் தலைவர்களான பேராசிரியர் அத்தனகே ரதனபால தேரர், அத்தனகே சாசனரதன தேரர், கலாநிதி மாதம்பகம அஸ்ஸாஜி தேரர், கித்தலாகம ஹேமசார தேரர், ராஜகிய பண்டித கொஸ்கொட சுபோதி அனுநாயக்க தேரர், கலாநிதி கபுகொல்லாவே ஆனந்த கித்தி தேரர், அருட்தந்தை ஆசிரி பெரேரா, அனுர பெரேரா, சிவலோகநாதன் குருக்கள், கலாநிதி சுப்பிரமணியம் குருக்கள், மௌலவி அம்மார் ஹகம்தீன், மௌலவி முஹம்மட் பிர்தௌஸ் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, அநியாயமான கைதுகள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தடுப்புகள், கட்டுப்படியாகாத வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.