‘பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்யும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை’

Date:

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை சித்திரவதை செய்ததாக நிரூபிக்கப்படும் மாணவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குற்றவாளிகளை வகுப்புகளில் இருந்து தடை செய்யவும், அவர்களின் பட்டங்களை ரத்து செய்யவும், உள்ளூர் பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதிக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.

மேலும், அரசில் பணியாற்ற முடியாத வகையில் அவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க வழக்கறிஞர்களின் உதவியைப் பெறுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பதற்றங்கள் காரணமாக கடந்த வருடம் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய 73 பேரை மீள அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை சித்திரவதை செய்வது முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும், அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அதில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தற்போதைய சட்டங்களே போதுமானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில் இவ்வாறான நிகழ்வுகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு எதிராக தரம் பாராமல் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை சித்திரவதைக்கு உட்படுத்திய மாணவர்களுக்கான சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலை ஒன்றில் உணவருந்திக் கொண்டிருந்த 11 மாணவர்களை தாக்கியமைக்காக கலைப் பீட மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...