வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாவலப்பிட்டிய மக்களுக்கு, எம்.எப்.சி.டி. வழங்கிய புனர்வாழ்வுக்கான சேவைகள்! (காணொளி)

Date:

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் நாவலப்பிட்டி பகுதியில் ஏற்பட்ட பாரிய வெள்ளம் காரணமாக, அங்கு வாழும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இவ்வெள்ள அனர்த்தத்தினால் பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டதுடன் அவர்களின் சொத்துக்கள், உடைமைகள் , மிகக்கடுமையான பாதிப்புக்குள்ளாகின.

இந்நிலையில், அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளையும் வாழ்வாதார உதவிகளையும் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் அரச நிறுவனங்கள், மட்டுமில்லாது ஏனைய அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளிட்ட பலரும் உதவிகளை செய்து வருவதுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மீள ஒழுங்கமைப்பதற்கும், சேதங்களை திருத்திக் கொள்வதற்கும், தொழில்வாய்ப்புக்களை அமைத்துக் கொள்வதற்கும் பல்வேறு பங்களிப்புக்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையின் பிரபலமான சமூக சேவை அமைப்புகளில் ஒன்றான எம்.எப்.சி.டி நிறுவனம் பலவருட காலமாக நாட்டில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றது. இவ்வமைப்பு அரச அங்கீகாரம் பெற்றதொரு அமைப்பாகும்.

இவ்வமைப்பு, நாவலப்பிட்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்த சேவைகள் பற்றிய அறிக்கையே இங்கு இணைக்கப்பட்டுள்ள காணொளியாகும்.

https://fb.watch/fN7DI4wRgl/

இக் காணொளியில், அப்பகுதி மக்களுக்காக வழங்கப்பட்ட பணிகள், சேவைகள் மற்றும் அவர்கள் பாதிப்பு நிலைமையிலிருந்து மீண்டெழுந்து வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட காத்திரமான நடவடிக்கைள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

எம்.எப்.சி.டி நிறுவனம் வழங்கிய சேவை இக் காலகட்டத்தில் அங்குள்ள மக்களுக்கு பேருதவியாக அமைவதில் எவ்வித சந்தேகமுமில்லை.

அதேவேளை, ஏனைய அமைப்புக்கள், மற்றும் நிறுவனங்களும் இப்பகுதி மக்களுக்காக செய்துள்ள பாரிய சேவைகள் தொடர்பிலும் நன்றியுடன் நினைவுகூற வேண்டும்.

இன்று நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி யில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்கின்ற மக்களுக்கு இன, மத பேதத்துக்கு அப்பால் மனிதாபிமான ன அடிப்படிடையில் இந்நாட்டு மக்களை தூக்கி விடக்கூடிய பாரிய பணியை செய்ய வேண்டிய பொறுப்பு இப்போது சமூக நிறுவனங்களுக்கு முன்னால் ஏற்பட்டுள்ளது.

இவ்வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களை சீரமைக்க எப்.எப்.சி.டி. போன்ற சமூக நிறுவனங்கள், தனவந்தர்கள், முன்வந்தது போல, நாட்டு மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பாரிய, துயர் நிறைந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்பதற்கும் எல்லா சமூக சேவைகள் நிறுவனங்களும் தனவந்தர்களும் முன் வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

(அபூ முஸ்அப்)

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...