வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் வீடு மற்றும் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது கிடைக்கப்பெற்ற காணொளி காட்சிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சந்தேக நபர்களின் குறிப்பிட்ட அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
தலைமையக பொலிஸ் பரிசோதகர் புத்தளம்: 071 8 591 292
தலைமையகம் பொலிஸ் புத்தளம்: 0322 265 222