ஆன்மீக இந்தியாவை சுட்டிக்காட்ட இலங்கைக்கு செய்த உதவியை மேற்கோள் காட்டுகிறார் ஆர்.எஸ்.எஸ் தலைவர்!

Date:

இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் துன்பத்தில் இருந்தபோது இந்தியா மட்டுமே உதவியது, மற்ற நாடுகள் வணிக வாய்ப்புகளைத் தேடுவதில் ஆர்வமாக இருந்ததாக இந்தியாவின் பா.ஜ.கவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய மற்றொரு அமைப்பான பாரத் விகாஸ் பரிஷத் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கையில் வர்த்தக வாய்ப்புகளைப் பார்த்தபோது தமது கவனத்தைத் திருப்பின.

இப்போது இலங்கை சிக்கலில் இருக்கும்போது, ​​யார் உதவுகிறார்கள்? இந்தியா மட்டுமே. மாலத்தீவு தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்ட போது அந்த நாட்டுக்கு தண்ணீரை அனுப்பியது யார்? அதை இந்தியாதான் செய்தது. இது ஆன்மீக இந்தியா என்றார்.

இந்த நவீன காலத்தில் பின்பற்றப்படும் இந்த பண்பை நம் முன்னோர்கள் நமக்கு அளித்துள்ளனர், இந்த கொந்தளிப்பான மற்றும் சவாலான காலங்களில் உலகிற்கு இந்தியாவை வழி காட்ட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் வலியுறுத்தினார்.

‘எத்தனை படையெடுப்புகளுக்கு மத்தியிலும் நாங்கள் ஹிந்துஸ்தானமாக இருக்கிறோம், நாங்கள் மஹாசக்தியாக மாறுவது மட்டுமல்லாமல், விஸ்வ குருவாக மாறுகிறோம்’ என்று பகவத் கூறினார்.

ஆன்மிகம் இந்தியாவின் ஆன்மா. இந்தியா என்ன செய்ய வேண்டும்? இந்த ஆன்மிகத்தின் அடிப்படையில் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை நம் சொந்த உதாரணத்தின் மூலம் அனைவருக்கும் சொல்ல வேண்டும்,என்றார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருளை அவசரகாலமாக வாங்குவதற்கான கடன் வரிகள், நாணய மாற்றம் மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஒத்திவைத்தல் மதிப்புள்ள பொருளாதார உதவிகளை இந்தியா இலங்கைக்கு நீட்டித்துள்ளது.

இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொடா, புதுடெல்லியின் பங்கை ஒப்புக்கொண்டார், பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான தனது நாட்டின் முயற்சிகளுக்கு இந்தியாவை ‘தர்க்கரீதியான பங்காளியாக’ கொழும்பு பார்க்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...