எரிவாயு விலையை கணக்கிடும் விலை சூத்திரத்தின் படி இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபா வரை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
விலை சூத்திரத்தின் பிரகாரம் லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூர் பால் மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 400 கிராம் உள்ளுர் பால் மா பொதி ஒன்றின் விலை 100 ரூபாவினாலும், 1 கிலோ கிராம் பொதி ஒன்றின் விலை 230 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டை ஒன்றின் விலையை 100 ரூபாவினால் குறைப்பதற்கு சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்தன.