உயர்தர திரிபோஷ தொடர்ந்து வழங்கப்படும்:சுகாதார அமைச்சர்

Date:

இந்த நாட்டில் உள்ள குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் தொடர்ந்தும் உயர்தர திரிபோஷ மாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

திரிபோஷ தொடர்பில் அண்மைய நாட்களில் வெளியான உண்மைகளை ஆராய்ந்து கலந்துரையாடுவதற்காக தேசிய மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குழுவுடன் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, தெற்காசியாவிலேயே குழந்தைகளுக்கு இவ்வாறான ஊட்டச் சத்துக்களை வழங்கும் ஒரே நாடு இலங்கை என்றும் அமைச்சர் கூறினார்.
இதற்கு தேவையான அதிகபட்ச ஒதுக்கீடு திறைசேரியிலிருந்து ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திரிபோஷாவுக்கான மூலப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்கு மேலதிகமாக சில தனியார் நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் திரிபோஷ திட்டத்தில் எந்த செயலிழப்பும் ஏற்படவில்லை என்றும், உணவு பணவீக்கத்தை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Popular

More like this
Related

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...