கட்டார் உலகக் கோப்பை போட்டியே கடைசி: லயோனல் மெஸ்ஸி!

Date:

கட்டாரில் எதிர்வரும் நவம்பா் மாதம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியே தனக்கு கடைசி என ஆா்ஜென்டீனா கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி கூறியிருக்கிறாா்.

எனினும், அந்தப் போட்டியுடன் அவா் ஆா்ஜென்டீன அணியிலிருந்து ஓய்வுபெறுகிறாரா, அல்லது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இதுதான் கடைசியா அல்லது கால்பந்திலிருந்தே ஓய்வு பெறுகிறாரா என்பதை அவா் தெளிவுபடுத்தவில்லை.

கட்டார் போட்டியானது, மெஸ்ஸியின் 5-ஆவது உலகக் கோப்பை போட்டியாக இருக்கிறது. எனினும், தேசிய அணியின் கேப்டனாக இப்போட்டியில் அவா் இன்னும் கோப்பை வென்று தராதது குறையாகவே இருக்கிறது.

இந்நிலையில், சமீபத்திய நோ்க்காணல் ஒன்றில் பேசிய மெஸ்ஸி, “உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் ஆவதற்கான அனைத்துத் தகுதிகளும் ஆா்ஜென்டீனாவுக்கு இருப்பதாக நம்புகிறேன். இந்தப் போட்டிக்கு நாங்கள் முன்னேறி வந்ததன் அடிப்படையில் அதைச் சொல்கிறேன்.

ஆனால் போட்டியில் எதுவும் நிகழலாம். ஒவ்வொரு ஆட்டமும் கடினமானது. எப்போதுமே எதிா்பாா்த்த முடிவுகள் கிடைப்பதில்லை. இவற்றைக் கடந்து இந்த உலகக் கோப்பை போட்டி குறித்து எனக்கு சற்று கவலையும், பதற்றமும் இருக்கிறது. இதுவே எனது கடைசி போட்டியாகும்” என்றாா்.

Popular

More like this
Related

முழந்தாளிட்டுக் கட்டப்பட்ட குளோபல் சுமுத் புளோட்டிலா ஆர்வலர்கள்: இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயலுக்கு இலங்கை கண்டனம்.

காசா பகுதிக்கு ஆதரவாகச் சென்ற சர்வதேச மனிதாபிமான உதவிக் கப்பல் குழுவினர்...

வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

எதிர்வரும் 2026 மே 30 அன்று மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள வெசாக் புண்ணிய தினத்தை...

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை: விசிக, முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப்படும் முக்கிய பதவிகள்.

விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர்...

இரத்மலானை உயர்பாதுகாப்பு வலயத்தில் இரகசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி மையங்கள் : வெளிநாட்டவர்கள் கைது

இரத்மலான சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்குள்...