கோதுமை மாவின் விலை குறையுமா?

Date:

எதிர்வரும் வாரத்தில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 250 ரூபாவாக குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அனுராதபுரம் மாவட்ட சபை உறுப்பினர் ரோஹன பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சுமார் நூறு மா கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும் அவற்றை இறக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மா தொடர்பில் பாரிய பிரச்சினை இருப்பதை தான் ஒப்புக்கொள்வதாக தெரிவித்த நளின் பெர்னாண்டோ,

இந்த நாட்டில் மாவை உற்பத்தி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களும் டொலர் பற்றாக்குறையினால் போதியளவு கோதுமை தானியங்களை இறக்குமதி செய்ய முடியாத காரணத்தினால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதன் பின்னர் இந்தியாவில் இருந்து கோதுமை மாவை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதாகவும், இறக்குமதியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மாவின் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

‘சமநீதி’ மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா நாளை கொழும்பில்

'சமநீதி' (Equity) என்ற பெயரிலான புதிய மாதாந்த சஞ்சிகையொன்று இம்மாதம் முதல்...

‘சிசு செரிய’ சேவையை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் புனித குர்ஆன் பல்கலைக்கழகம் உருவாக்கம்: சுல்தான் அப்துல்லா வரலாற்று அறிவிப்பு!

மலேசியாவின் பகாங் (Pahang) மாநிலத்தில் குர்ஆனியக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், 'புனித...

சாரதி அனுமதிப் பத்திர விண்ணப்பதாரர்களில் 8% பேருக்கு உடல்நலக் குறைபாடு.

இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் (Driving License) கோரி விண்ணப்பித்தவர்களில் சுமார்...