சமூக வலைதளங்களில் வைரலான ஆசிரியர்களின் நடனம் குறித்து அதிகாரிகளின் முடிவு!

Date:

அண்மைய நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் பெண் ஆசிரியர்கள் நடனமாடும் காணொளி தொடர்பான விசாரணைகள் குறித்து மேல்மாகாண கல்வி திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸின் கையொப்பத்துடன் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கூட்டுச் செயற்பாடாகவே ஆசிரியையின் நடனம் தொடர்பான சம்பவம் வெளிவருவதாக அது தொடர்பான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் உரிய அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு கதிரான கனிஷ்ட கல்லூரியில் நடைபெற்ற சிறுவர் தின கொண்டாட்டத்தின் போது பாடசாலை ஆசிரியை ஒருவர் மாணவர்களுடன் நடனமாடுவதைக் காட்டும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...