தென்கொரிய நாட்டில் பொதுமக்கள் குழுமியிருந்த விழா நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 151 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தென்கொரிய நாட்டின் சியோலில் இதாவோன் என்ற பகுதியில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த திருவிழாவானது உயிரிழந்த முன்னோர்கள், புனிதர்கள், உற்றார் உறவினர்களை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
அங்கு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹாலோவீன் திருவிழா நடைபெறாமல் இருந்தது.
இந்தாண்டு அந்த விழாவை கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இடாவோன் பகுதியில் நேற்றிரவு சுமார் ஒரு லட்சம் பேர் குவிந்தனர்.
அப்போது குறுகிய வீதி ஒன்றில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிலர், மயங்கி விழுந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததுடன், மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
மூச்சுத்திணறல் காரணமாக 149 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 20-30 வயதுகளில் இருக்கும் பெண்கள் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது.
இச்சம்பவம் தற்செயலாக நிகழ்ந்த விபத்தா அல்லது பின்னணியில் ஏதேனும் பாதுகாப்பு குளறுபடி, சதித்திட்டம் போன்றவை உள்ளதா என்ற கோணத்தில் சியோல் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை இந்த சம்பவத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டியில் வசிக்கும் 27 வயதுடைய ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் மேலும் பல இலங்கையர்கள் உயிரிழந்துள்ளாரா அல்லது காயமடைந்துள்ளாரா என்பதை கண்டறிய தென்கொரியாவிலுள்ள இலங்கை தூதரகம் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து தென் கொரிய அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை அறிவிக்கவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
At least 146 dead, 150 injured in #Seoul after stampede during #Halloween festivities.#SouthKorea #Halloween #Seoul #Itaewon #이태원 #이태원사고 #압사사고. pic.twitter.com/IhjZBU4yYu
— Siraj Noorani (@sirajnoorani) October 29, 2022