நல்லிணக்கம் தொடர்பாக அமைச்சரவை உபகுழு!

Date:

நல்லிணக்கத்திற்கான அமைச்சரவை உபகுழுவை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் வடக்கு கிழக்கில் மோதலுக்குப் பின்னரான மீள்குடியேற்றம், காணி மற்றும் காணாமல் போனோர் தொடர்பான மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த உபகுழு ஸ்தாபிக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பிரதமர் தினேஸ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், இரண்டு தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும்தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இந்த ஆண்டின் இதுவரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்களால் 670க்கும் மேற்பட்ட உயிரிழப்பு!

நாடு முழுவதும் ஆண்டுதோறும் பதிவாகும் வீதி விபத்துகளின் எண்ணிக்கையில் ஒரு சீரான...

20 மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல...

சுரேஷ் சாலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பு: சிரியா சென்றடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி.

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடான்...